எளிமையான ருசியான பொரிவிளங்கா உருண்டை

   இந்த பொரிவிளங்கா உருண்டை மிக எளிதாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே செய்யக்கூடிய ருசியான இனிப்பு வகை. இதன் சிறப்பம்சம் தண்ணீர் படாமல் வைத்து இருந்தால் ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.


தேவையான பொருட்கள்:-
     புழுங்கல் அரிசி 1 கிலோ
     மண்ட வெல்லம் 1 கிலோ
     பொரிகடலை 200 கிராம்
     உப்பு 1/2 தேக்கரண்டி
     சுக்கு தேவையான அளவு

செய்முறை:-
     புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்து மாவாக அரைத்து கொள்ளவும். அந்த மாவில் சுத்தம் செய்த பொரிகடலை மற்றும் சுக்குப்பொடி சிறிதளவு சேர்த்து, அகலமான தட்டில் கொட்டவும். பிறகு மண்ட வெல்லத்தை தேவையான அளவு தண்ணீர் கலந்து வடிகட்டி 1 கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.

     பின், கொஞ்சம் கொஞ்சமாக மாவில் ஊற்றி இளஞ்சூட்டில் கொழுக்கட்டை போல் பிடித்து உருண்டையாக ஆற வைத்தால் ருசியான பொரிவிளங்கா உருண்டை ரெடி.

அனைவரையும் இந்த பதிவு சென்றடைய மறக்காமல் உங்கள் ஓட்டையும் பதிவு செய்யவும்.

ஓட்டுப்போட இதை சுட்டவும்

மிக சுலபமான சுவையான மைதா குலோப் ஜாமூன்

மைதா குலோப் ஜாமூன் மிக எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டே சுலபமாக செய்ய கூடியது. சுவை பாக்கெட்களில் கிடைக்கும் குலோப் ஜாமூன் போலவே இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

மைதா -  1/4 கிலோ
சோள மாவு - 2 மேஜை கரண்டி
சீனி  - 1/4 கிலோ
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் பொரிப்பதற்கு ஏற்ப
ஏலக்காய்  - 5
கேசரி பவுடர் 1 சிட்டிகை

செய்முறை:-
     மைதா, சோள மாவு, 1 டீஸ்பூன் சீனி, 1 மேஜைக் கரண்டி சூடு செய்யப்பட்ட எண்ணெய், 1 சிட்டிகை உப்பு, சுடுதண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, ½ மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன் நிறமாக பொரித்தெடுத்து நன்றாக ஆறவிடவும்.

     இன்னொரு அகண்ற பாத்திரத்தில் 1/4 கிலோ சீனி, 1 சிட்டிகை கேசரி பவுடர், ஏலக்காயை பொடியாக்கி அதையும் சேர்த்து கொதிக்க வைத்து 1 கம்பி பதத்திற்கு முன்பாக இறக்கி விடவும். ஆறிய குலோப் ஜாமூன் உருண்டைகளை சீனி பாகில் போடவும். மறுநாள் சுவையான மைதா குலோப் ஜாமூன் ரெடி.


மறக்காமல் அனைவரையும் இந்த பதிவு சென்றடைய உங்கள் ஓட்டையும் பதிவு செய்யவும்.

ஓட்டுப்போட இதை சுட்டவும்

சுலபமான + சிக்கனமான +ருசியான சேமியா பருத்தி பால்

, இது மிகவும் ருசியான சேமியா பருத்தி பால். உடல் நலத்திற்கும் ஏற்றது, (சர்க்கரை நோயாளிகளை தவிர). சுலபமானதும், சிக்கனமானதும் கூட. 25 ரூபாயில் நான்கு பேருக்கு செய்து விடலாம்.  தவறாமல் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:- 
100 கிராம் -  பருத்தி விதை (நயமானதாக பார்த்து வாங்கவும்)
50 கிராம்  - வறுத்த சேமியா
1 / 2  மூடி  -  தேங்காய்
1 / 4 KG  மண்டவெல்லம் 
 ஏலம், சுக்கு தேவைகேற்ப
 உலர்திராட்சை,முந்திரி தேவைகேற்ப

செய்முறை:-
           பருத்தி விதையை முதல் நாள் நன்றாக ஊற வைத்து, மறுநாள் நன்கு கழுவி விடவும். பின் பருத்தி விதையை ஆட்டி வடிகட்டி முதல் பால், இரண்டாம் பால் எடுத்து கொள்ளவும். அதில் முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் இந்த பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதன் பின் வறுத்த சேமியாவை நன்றாக உடைத்து அதனுடன் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு வெள்ளத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு வடுகட்டி அதனையும் இந்த கலவையுடன் சேர்க்கவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

                    ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், அதில் உலர்திராட்சை, முந்திரி சேர்த்து லேசாக வறுத்து பின், அதனுடன் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். இளம் பொன்னிறம் வரும் வரை வறுத்து பின் அதை பருத்தி பால்  கலவையில் கொட்டி நன்கு கிளறவும். பின் ஏலம், சுக்கு தட்டி போட்டி ஒரு கொதி வரும் போது இறக்கினால் ருசியான சேமியா பருத்தி பால் தயார்.


மறக்காமல் அனைவரையும் இந்த பதிவு சென்றடைய உங்கள் ஓட்டையும் பதிவு செய்யவும்.

ஓட்டுப்போட இதை சுட்டவும்

Related Posts Plugin for WordPress, Blogger...